Saturday, September 16, 2017

Nava Durga thuthi in Tamil

Nava Durga  thuthi  in Tamil
(A prayer  to Nine forms of Durga)

By
Kumar  Ramanathan

Translated by
P.R.Ramachander



(Devotees   believe that worshipping Goddess  Durga is a blessed deed. On the nine days of Navarathri, each of these forms are   worshipped in the order given  , Here is a  tamil poem on her  nine forms by my  face book friend   Sri Kumar  Ramanathan )

பத்து கரஙகளுடன் சிஙகத்தில்
அமர்ந்திருக்கும் துர்கையம்மா
இந்த நவராத்திரி ஒன்பதுநாட்களில்
ஒன்பது வடிவத்தில் உன்னை
வணங்கி வழிபடுகிறேன் அம்மா

Pathu  karangaludan  Singgathil  ,
Amarnthirukkum  Durgayamma,
Indha nava  Rathri  onbathu Naatkalil ,
Onbathu vadivathil unnai,
Vanangi vazhi padugiren, Thaaye

Oh mother  durga  who with her   ten arms  is sitting on a lion,
In this nine days of Navarathri , I would salute and worship you in nine forms.

இமையத்தின் மகளாகியா நீ
முற்பிறவியில் தக்ஷனின் மகளாக
சதி பவானி என்ற பெயருடன்
சிவபெருமானை மண்ந்தாய்
கணவனை அழைத்து மதிக்கவில்லை
என்ற கோபத்தில் யாகத்தீயில்
தன்னையே அர்ப்பணித்தாய்

Imayathin  magalaakiya  nee ,
Mur puiraviyil  dakshanin  Magalaaga ,
SAthi Bhavani yendra  peyarudan,
Shiva perumaanai  mananthai,
Kanavanai  azhaithu mathikkavillai,
Yendra  kopathil Yaga  theeyil  ,
Thannaye   arpanithai.

You who are   the daughter  of Himalayas, in your previous  birth,
Were   born as   the daughter of Daksha and was named as Sathi Bhavani,
And you married Lord Shiva and feeling that  your husband  ,
Was not invited  and honoured, in great anger  offered yourself in the sacrificial fire.


ஷைலபுத்ரி என்ற் பெயருடன்
உலகசக்தியாய் இருக்கும் உன்னை
வணங்கி வழிடுகிறேன் அம்மா

SAila puthri  yendra  peyarudan  ,
Ulaga sakthiyai irukkum  unnai  ,
Vanangi  vazhipadukiren amma.

I salute and worship you with the name Saila Puthri (Daughter of mountain) ,
Who   is the great  power   in the earth.

ப்ரும்மாச்சாரிணி என்ற பெயருடன்
விளையாட்டுப் பருவம் முதல்
மண்ந்தால் சிவனையே மணப்பேன்
என்ற உறுதியுடன் தவமிருந்து
இந்த உலகை காக்கும் உண்னை
வணங்கி வழிபடுகிறேன் அம்மா

Brahmachaini   yendra peyarudan ,
Vilayattu paruvam muthal  ,
Manathaal Shivanaye  Manappen  ,
Yendru uruthiyudan   thavamirunthu,
Indha  Ulagaii kaakum unnai  ,
Vanangi vazhi   padukiren Amma

I salute and worship you with name  Brahmacharini(Unmarried maid),
Who from   the age on infancy had decided that if you marry,
It would be only   with Lord Shiva and  observed ,
Strict penance   and who  is protecting this world.

பிறை சந்திரனை நெற்றியில் அணிந்து
பத்து கைகளில் பத்து விதமான
ஆயுதம் ஏந்தி கர்ஜிக்கும் சிஙகத்தில்
கம்பீரத்துடன் அமர்ந்து தீய சக்திகளை
அழித்து இந்த உலகை காக்கிறேன்
என்று சபதமெடுத்து சந்திரகாந்தா
என்ற பெயருடன் இருக்கும் உன்னை
வணங்கி வழிபடுகிறேன் அம்மா

Pirai chandiranai nethriyil aninthu,
Pathu kaikalil pathu  vidhamana ,
Ayudham yenthi garjikkum singathil,
Gambheerathudan amarnthu, theeya sakthigalai,
Azhithu indha ulagathai  kaakukiren,
Yendra sabatham yeduthu, Chandra  Kantha,
Yendra  Peyarudan irukkum unnai,
Vanangi vazhi padugiren Amma

I salute and salute you Chandrakantha(She who shines like moon),
Who wears the  crescent on her forehead, who is armed   with,
Ten different weapons   in her   ten different    hands,
And sitting regally on a lion and took an oath   that,
“I would destroy all evil spirits and  protect this world.”


சூரியனின் ஒளியை முகத்தில் தாங்கி
எட்டு கைகளுடன் சிரித்தமுகத்துடன்
இந்த பூஉலகையே ஆட்டுவித்து எட்டு
திசையிலும் ஒளி மயமாக இருந்து
இந்த உலகத்தின் இருளை போக்கி
குஷ்மந்தா என்ற பெயருடன் இருக்கும்
உன்னை வணங்கி வழிபடுகிறேன் அம்மா

Suryanin  oliyai  mukhathil thaangi  ,
Ettu kaikaludan  chiritha  mukathudan  ,
Indha bhoo  ulagaye  aattuvithu, ettu,
Disayilum   oli mayamaaka  irundhu  ,
Indha ulagathin  irulai pokki ,
Kushmana  yendra  peyarudan irukkum,
Unnai vanangi  vazhipadugiren Amma,

I am saluting   and worshipping you oh mother, whose name is Kooshmanda,
Who receivesthe sun’s light in her face, who has eight hands and a smiling face,
Who shakes this entire world, who lights the eight directions and who removes darkness of the world.
தவமிருந்து சிவனை மணந்து இந்த
பூஉலக சேனாதிபதியான ஸ்கந்தனை
பெற்றெடுத்து அக்னியை தன்னுள் அடக்கி
மூன்று கண்களுடனுன் நான்கு கைகளுடனும்
ஸ்கந்தனை மடியில் அமர்த்தி ஸ்கந்தமாதா
என்ற பெயருடன் இருக்கும் உன்னை
வணங்கி வழிபடுகிறேன் அம்மா

THavamirundhu  Sivanai mananthu  indha ,
Bhoo ulaga   senathipathiyaana  skandanai,
Petheduthu  Agniyai thannul adakki,
Moondru  kankaludan  un nanku kaikaludanum,
Skandanai  madiyil  amarthi Skanda Mathaa,
Endra  peyarudan irukkum unnai,
Vanangi vazhi padugiren  Amma

I salute and worship you oh mothe, who has the name of Skanda matha(Mother od Skanda),
Who did penance , got married to lord Shiva, who gave birth to Skanda  ,
Who was the commander  of this world, who keeps  fire inside her  ,
Who has   three eyes  and four hands and keeps Skanda on her lap.

காத்யாயன் என்ற ரிஷி அம்பாள தான்
மகளாக பிறக்கவேண்டும் என்று
தவமிருந்து பிறந்த பெண்ணான உன்னை
காத்யாயனி என்ற பெயரிட்டு வளர்த்த
உன்னை இந்த உலகிறகெ அர்பணித்தார்
மூன்று கண்களுடனும் எட்டு கைகளில்
ஆயுதம் ஏந்தி இந்த உலகை காக்கும்
உன்னை வணங்கி வழிபடுகிறேன் அம்மா

Kathyayana   endra rishi   ambal thaan,
Makalaaka  pirakka  vendum endru,
THavamirunthu  pirantha pennaana unnai,
Kathyayani   yendru peyarittu valartha,
Unnai   indha ulagirkke arpanithaar  ,
Moondru  kangaludan , ettu kaikalil,
Ayudham yendhi indha ulagathai kaakkum,
Unnai vanangi vazhi padukindren Amma

Oh mother I   salute and worship you, who was born to sage Kathyayana ,
When he did penance saying that only the goddess  should be daughter to him,.
And who gave you the name Kathyayani  and dedicated you to this world,
And you with three eyes and carrying arms in her eight hands is protecting the world.


இருள் போன்ற கறுத்த உருவத்துடன்
மண்டைஓட்டினை மாலையாக அணிந்து
எரியும் அக்னியை இட்து கையில் தாங்கி
வலது கையில் வாளினை ஏந்தி பார்த்தால்
பயம் தோன்றும் கண்களை உருட்டி
சுடுகாட்டின் பிணத்தின் மேல் அமர்ந்து
இரவு நேரத்தில் பவனி வரும் கால்ராத்திரி
என்ற பெயருடன் நானிருக்க பயம் ஏன்
என்று பக்தர்களை ஆசீர்வதிக்கும் உன்னை
வணங்கி வழிபடுகிற்றேன் அம்மா

Irul pondra karutha  uruvathidan ,
Mandai ottinai malayaka aninthu  ,
Eriyum agniyai idathu kayyil thaangi  ,
Valathu kayyil vaalinai yenthi   paarthaal,
Bhayam thondrm kankalai urutti,
Sudu kaattin  pinathin mel amarnthu,
Iravu nerathil  bhavani varum  Kala rathri,
Yendra  peyarudan naan irukka   bhayam yen,
Yendru bhakthargalai   aseervathikkum  unnai  ,
Vanangi  vazhi padukindren amma.

Oh Mother   I salute    and worship you, who has a black form like night  ,
Who wears a skull garland , who holds a pot of burning fire in her left hand.
Who holds a sword in her right hand, who rolls her  very fear some  eyes,
Who sits on the corpse of the  burual ground, who roams about at night,
With the name Kala Rathri(dark night) and asks us ,
Why be scared when I am there     and gives blessings to us. 

சந்திரனை போன்ற வெண்மையான உடலுடன்
வெண்னிற ஆடை அணிகலன்கள் அணிந்து
எட்டு வயது குமரியின் உருவத்துடன் காளை
மாட்டின் மேல் அமர்ந்து ஒரு கையில்
த்ரிசூலமும் மற்றொருகையால் ஆசீர்வதித்து
மஹா கௌரி என்ற பெயருடன் இருக்கும்
உன்னை வணங்கி வழிபடுகிறேன் அம்மா

CHandranai pondra venmayaana   udaludan,
Vennira aadai ani kalankal aninthu  ,
Ettu vayathu   kumariyin uruvathudan  ,
Kalai maatin mel   amarnthu oru kayyil,
Trisoolamum  mathoru kayyal   aaservathithu  ,
Maha Gauri   endra peyarudan irumkkum ,
Unnai vanangi vazhi padukindren Amma

Oh mother I salute  and worship you  who has a white body like the moon,
Who wers white cloths and ornaments, who has form of an eight year old girl,
Who rides on a bull , holds trident in one hand and  blesses with the other,
And who has the   name  oh Maha Gauri.

மஹா சக்தியான உன்னை வணங்கி
எட்டு ஸித்திகளை பெற்ற சிவபெருமான்
தன்னுடம்பில் பாதியை உனக்களித்து
அர்த்த்நாரீச்வரன் என்று பெயர் பெற்றான்
எல்லா சித்திகளயும் உன்னில் அடக்கி
ஸித்திதாத்ரி என்ற பெயருடன் இருக்கும்
உன்னை வணங்கி வழிபடுகிறேன் அம்மா

Maha Sakthiyana unai   vanangi  ,
Ettu sidhigalai pethra  Siva peruman,
Thannudambil pathiyai unakka;ithu ,
Ardha naareeswaran    yendru peyar pethran,
Ella sidhigalayum unnul adakki  ,
Sidhi dathri yendra peyarudan irukkum,
Unnai  vanangi vazhi padukiren amma.

Oh Mother I pray and salute you , who has the name Sidhi Dhatri(Giver of occult powers),
Who was worshipped   as Maha Sakthi by Lord Shiva   for getting the eight  occult powers,
And later he gave half of his body to you and got   the name Ardha Naareswara,

AS you have compressed   within you all   the possible occult powers.

Tuesday, September 12, 2017

Namam Japikkuga in Tamil

Namam Japikkuga in Tamil

Translated in to Tamil by
Geetha Kalyan

(My heart felt thanks to her)

சமீபத்தில் திரு மாவிலிச்சேரி சுப்ரமண்யன் நம்பூதிரி இயற்றிய "நாம.ம் ஜபிக்குக" என்ற மலையாளப்பாணலை திரு Puducode Rama Iyer Ramachander அவர்கள் ஆங்கில உரையுடன் மீள்பதிவு செய்திருந்தார். அதன் தமிழாக்கம் அடியேனுக்கு அறிந்தவரை இங்கே பதிவிடுகிறேன். சரீரத்திலிருந்து உயிர் பிரியும் தறுவாயில், அஜாமிளனைப் போல் எப்பேர்ப்பட்ட பாபியாக இருந்தாலும் ஹரி ஹரி என்று பகவன் நாமாவைச் சொல்லும் வாய்ப்பைக் கொடுக்க இறைந்ஞி வேண்டும் துதியாக இது அமைந்துள்ளது. "மனம் எண்ணிடுமோ தெரியாது.. ஹரி நாராயணா" என்ற பாடலும், "அந்த:க்காலே ச மாம் ஏவம் ஸ்மரன்" என்ற கீதா வாக்கியத்தை மஹாபெரியவா விரிவாக விளக்கியிருப்பதும் நினைவில் வருகிறது. குருக்ருபையில் இறை நினைவு வர ப்ரார்த்திக்கின்றேன்🙏🙏🙏🙏🙏
1. நாவும் குழையாமல் நாம ம் செபித்திட
இயலவும் வேண்டுமே நாராயணா ஹரே!
நாராயணா ஹரே நாராயணா ஹரே
நாராயணா ஹரே நாராயணா!!
2. மோஹம் பலதும் நிறைவேறிடாமலே
தேஹம் மெலிந்தொரு கிழவனானேன் ஹரே!
வியாதியும் வந்து அகப்பட்டுக்கொண்டு நான்
வேதனையோடு கிடக்கும் தருணத்தில் (நாராயணா ஹரே)!!
3. வந்தவை போகாமல் வெவ்வேறு வியாதிகள்
மீண்டும் மீண்டும் வந்து தொல்லை கொடுக்குதே
தேஹம் முழுவதும் கைவசப்படுத்தியே
தாஹியை இப்படி வாட்டி வதைக்கையில் (நாராயணா ஹரே)!!
4. மெய்யும் தளர்ந்து அவசனாக ஒன்றும்
செய்ய இயலாமல் கை கால் குழைந்து நான்
மலம் நிறைந்த தேஹமாம் படுக்கையில்-பெரும்
பாம்பினைப் போல் படுத்துக் கிடக்கவே (நாராயணா ஹரே)!!
5. சற்றே சாய்ந்து படுக்கவும் கால்களைச்
சற்றே மாற்றி வைக்க இயலாமல்
முட்டிக்குமுட்டி வேதனை தாங்காமல்
செய்வதறியாது திகைக்கின்ற வேளையில் (நாராயணா ஹரே)!!
6. கையிலும் காலிலும் வீக்கம் வந்து ரத்த-
மில்லாமல் தேஹமும் வெளிர்த்தொரு தேஹியை
ஆசைகளேதேனும் உண்டென்றால் நிறைவேற்ற
உரைசெய்த வைத்தியனும் கைவிட்ட வேளையில் (நாராயணா ஹரே)!!
7. ஒன்றுக்கும் உதவாத அசிங்கமாம் தேஹத்தை
எப்பொதும் மலத்தில் புதைந்து கிடப்பதை
ஒருபோதும் இவ்வுடலை கைவிட ஒவ்வாமல்
என்னுடைய மானஸம் மாழ்கிடும் வேளையில் (நாராயணா ஹரே)!!
8. மாரக வியாதிகள் ஒன்றாகச் சேர்ந்துமென்
மெய்யில் அதிகாரம் செய்யத் தொடங்குதே
சொல்ல முடியாதவருத்தங்கள் வாட்டுதே
எல்லையில்லா துக்கம் பின்னிப் பிணைக்குதே (நாராயணா ஹரே)!!
9. கிஞ்சித்துச் சதையும் மேதஸ்ஸ்மில்லாமல்
எலும்பும் தோலுமாய் மாறின மெய்யுடன்
காண்பதற்க்கோ வெறும் பிணத்தினைப் போலவே
நீண்டு மல்லாக்கக் கிடக்கின்ற வேளையில் (நாராயணா ஹரே)!!
10. இழுத்துப் பிடிக்கின்ற வீங்கின வயிறுடன்
எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும் உடம்புடன்
தோலில் பொதிந்தவோர் அஸ்திகூடம் போன்று
கால்களை நீட்டத் துவங்கிடும் வேளையில் (நாராயணா ஹரே)!!
11. நூறாயிரம் கூர்த்த முட்களும் குத்திடும்
ஏராளம் வேதனைக்காளாகிக்கிடக்கையில்
முன்னில் நின்றிந்த ஜீவசைதந்யத்தைக்
காலன் பிடித்துப் பறிக்கும் தருணத்தில் (நாராயணா ஹரே)!!
12. உதடுகள் ரெண்டும் கிழிந்து பல்லுந்தி
கண்ணிரண்டும் குழிந்து வாய் பாதி திறந்து
காணவே விக்ருதமாம் ரூபத்துடன் கூட
மரணச்வாஸமும் இழுக்கின்றவேளையில்(நாராயணா ஹரே)!!
13. தீயிலூதிப் பழுப்பித்த கம்பிகள்
மெய்யில் குத்தி ஏற்றும்போல் ஊர்த்வமும்
தேஹத்திலுள்ள தேஹியாம் ப்ராணனை
தேஹத்தை விட்டு அகற்றும் தறுவாயில் (நாராயணா ஹரே)!!
14. எல்லாம் துறந்து பிரிகின்ற வேளையில்
எல்லோர்க்கும் பயத்தைக் கொடுக்கின்ற நேரத்தில்
சொந்தங்கள் பந்தங்கள் சுற்றங்களெல்லோரும்
விட்டுவிலகிடும் வன்துன்ப வேளையில்
(நாராயணா ஹரே)!!
15. எத்தனை துஷ்கர்மம் செய்த அஜாமிளன்
மைந்தனைப் பார்த்து பெயரொன்றுரைக்கவே
பக்தனாக்கி அவன் தேஹியை கைதூக்கி
காத்த நாராயணா என்னையும்காப்பாயே !!
நாராயணா ஹரே நாராயணா ஹரே
நாராயணா ஹரே நாராயணா!!
நாராயணாஹரே நாராயணா ஹரே நாராயணா ஹரே நாராயணா!!!!